Friday, January 27, 2012

நம் விதி தான் நமக்கு

நம் விதி தான் நமக்கு

பொறாமை அடிக்கடி மன அமைதியைக் குலைக்கிறது. நீங்கள் எவர் மீதாவது  பொறாமைப் படுகிறீர்களா?  பொறாமை  ஒரு வியாதி. உங்களது அலுவலகத்தில் திரு.க உங்கள் பதவி உயர்வைத் தடுத்தார் என்பதாலோ அல்லது உங்கள் வியாபாரத்தில் திரு. கே. போட்டியிட்டுக் குலைத்தார் என்று நீங்களாகக் கற்பனை செய்வது தவறு. திரும்பத் திரும்ப எண்ணுங்கள். உங்களது முன்னேற்றத்தை எவரும் ஆக்கவோ, அழிக்க்வோ முடியாது. உங்களது தொழிலும், உங்களது  வாழ்க்கையும் உங்கள் முன் வினையால் உருவாக்கப்படுகிறது. தீதும் நன்றும் பிறர் தர வாரா! நீங்கள் முன்னேற வேண்டும் என்று விதி இருந்தால் உலகம் முழுவதும் ஒன்று திரண்டாலும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது. அதற்கு மாறாக நடக்க வேண்டுமெனில் அப்பொழுதும் உலகம் முழுவதானாலும் ஒன்றும் செய்ய இயலாது.ஒவ்வொரு மனிதனும் அவனது விதியினாலேயே ஆளப்படுகிறான். ஒருவரை சார்ந்திருப்பது போலத் தென்ப்பட்டாலும் ஒருவரது வாழ்விலிருந்து அடுத்தவருடையது வேறுபட்டது ஆகும். இதை நினைவு கொள்ளுங்கள். இந்த கருத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு பொழுதும் பிறர் மீது பொறாமை கொள்ளாதீர்கள்  அல்லது உங்கள் துன்பத்திற்கு பிறரைப் பழிக்காதீர்கள்.

பொதுமக்கள் கருத்துக்கு எவ்வளவு மதிப்பு?

பொது மக்களின் கருத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்காதீர்கள். பெரும்பாலும் பொது மக்களின் கருத்து தவறாக உள்ளது. ஒழுக்க நியதிகள், நன்னேறிகள், மறை நூல் வாக்கியங்கள், அறிஞர்கள் மற்றும் மகான்களது கருத்துக்கலுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நீங்கள் வாழ்வில் தவறவே மாட்டீர்கள்.

சூழ்நிலைக்கேற்ப நாம் மாற வேண்டும்

உங்கள் அமைதியைக் குலைக்கும் உங்களது ஒரு சூழ்நிலை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்.  சூழ்நிலையை மாற்றுவதற்குப் பதிலாக நீங்கள் உங்களையே இப்பொழுதை விட நல்ல நிலைமைக்கு மாற்றி அமையுங்கள். இப்படி நீங்கள் செய்வதால் வருடக்கணக்காக உங்களுக்குக் கெட்டதாகத் தென்பட்ட உங்களது சூழ்நிலை அதிசயிக்கத்தக்க விதத்தில் மாறத் தொடங்குவதை காண்பீர்கள். நீங்கள் மென்மேலும் தூய்மை அடையும்பொழுது சூழ்நிலையும் மென்மேலும் ஒத்த விதத்தில் வளர்ச்சி அடையும். எப்படி? என்று கேட்காதீர்கள். முயன்று பாருங்கள்.. அனுபவத்தில் தெரியும் நண்பரே..

Tuesday, January 24, 2012

பகைமை - எடுத்தாரை சுடும் நெருப்பு

பகைமை - எடுத்தாரை சுடும் நெருப்பு

உங்களை திட்டுபவர் அல்லது துன்புறுத்துபவர் மீது உங்கள் இதயத்தில் எந்த விதமான பகைமை உணர்ச்சியையும்  கொள்ளாதீர்கள். வெளிப்படையாக கோபத்தை காட்டுவதை விட இது மிகவும் மோசமானது. இது மானசீகப் புற்று நோய். பகைமையை வளர்க்காதீர்கள். மறவுங்கள். மன்னியுங்கள். இது ஏதோ ஒரு வெறும் லட்சியவாத பழமொழி அல்ல. உங்கள் அமைதியை பாதுகாக்க ஒரே வழி இது தான். உள்ளே பகைமை வளர்ப்பது என்பது ஒருவனுக்கு மிகுந்த கெடுதியைச் செய்யும். உங்களுக்கு தூக்கம் போய் விடும். உங்கள் இரத்தத்தை நீங்கள் நஞ்சாக்குகின்றீர்கள். இரத்தக் கொதிப்பும், படபடப்பும் உங்களிடம் அதிகரிக்கும். பழிச் சொல்லோ, அவதூறோ உங்களுக்கு கடந்த காலத்தில் எப்பொழுதோ செய்யப்பட்டது. அது முடிந்த போன விசயம். சிந்திய பால் அது. அதையே மீண்டும் மீண்டும் நினைத்து அந்த அவதூறு அல்லது பழி சொல்லின் துன்பத்தை ஏன் நீங்கள் நீட்டிக்கிறீர்கள்? பகைமை மற்றும் வெறுப்பு எனும் ஆறுகின்ற காயத்தை நீங்கள் குத்தி குத்தி மீண்டும் ஏன் புண்ணாக்குகிறீர்கள்? இது மிகவும் முட்டாள்தனம் இல்லையா?. இந்தச் சிறிய விசயங்களில் நேரத்தையும். வாழ்க்கையையும் வீணடிப்பது என்பது தகாத ஒன்று. ஏனேனில் மனிதனின் வாழ்வு மிகவும் சுருங்கியது. இன்றிருப்போர் நாளை இல்லை. இந்த தீய வழக்கத்தை விடுங்கள். உங்களுக்கு விருப்பமான வேலை ஒன்றில் பூரணமாக மனத்தை லயிக்கச் செய்வதே நீங்கள் செய்ய வேண்டிய சிறந்த காரியமாகும்.

உங்களுக்குப் பிடித்தமான வேலை அல்லது பொழுதுபோக்கில் நீங்கள் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்களானால் உங்களுக்கு மிகுந்த மன அமைதி கிட்டும். அப்பொழுது ஒன்றைப் பெற்றொம் ஒன்றைச் செய்தோம் என்ற மனதிருப்தி உங்களுக்கு கிட்டும். மனிதன் வெறும் உணவால் மட்டுமே வாழ முடியாது. பணத்தைக் காட்டிலும் மன அமைதியே பெரிது என நீங்கள் எண்ணினால் அதிக வருமானத்துடன் கூடிய, ஆனால் நீங்கள் விரும்பாத ஒரு வேலையை விட, குறைவான வருமானத்துடன் கூடிய மன அமைதி தரும் ஒரு வேலையை நீங்கள் மனமுவந்து ஏற்பீர்கள்.
புகழ் மனிதனுக்கு தேவையா?

உலகப் புகழ்ப் பெருமையை விரும்பாதீர்கள். மானசீக மற்றும் பௌதீக அமைதியின்மைக்கு இது தான் முக்கிய காரணமாகும். பிறர் உங்களை கமதிக்க வேண்டும் என ஏன் நீங்கள் விரும்புகிறீர்கள்? அந்த ம்ற்றவர் பெர்ம்பாலும் முட்டால் ஜனங்களே. இந்த உலகில் பெரும் வெற்றி அடைந்த மஹா புருஷர்கள் பிறரின் அங்கீகரிப்பை, சமூக மரியாதையை எதிர்பார்த்தவர்களல்ல என்பதை நினைவில் வையுங்கள்.

மற்றவர்களது மதிப்பிற்காக நாம் ஏன் இவ்வளவு தூரம் அலட்டிக் கொள்ள் வேண்டும்? அதற்குப் பதிலாக கடவுளது ஆசீர்வாதத்திற்காக, ஞானம் மிக்க மகாங்களது ஆசிகளுக்காக நாட்டம் கொள்ளுங்கள். இதுவே செய்யத் தகுந்த்து. முயல வேண்டியது.


நம் விருப்பமா உலகை இயக்குகிறது?

நம் விருப்பமா உலகை இயக்குகிறது?
கடவுள் பொருள்களை முழுமையாகப் பார்க்கிறார். மனிதன் பொருள்களை பகுதியாக பார்க்கிறான். மனிதன் கடந்த காலம் மற்றும் எதிர் காலத்திலிருந்து பிரிந்து, நிகழ்ச்சிகளை  நிகழ் காலத்தில் மட்டுமே பார்க்கிறான். கடவுளுக்கோ முன் நடந்ததும், பின் நடக்க வேண்டுவதும் தெரியும். அதனால் தான் கடவுள் ஒற்றுமையைக் காண்கிறார். மனிதன்  வேற்றுமையைக் காண்கிறான். கடவுள் பூரணமான நியாயத்தைக் காணும் அதே தருணத்தில், மனிதனோ அதைக் காண்பதில்லை. நீங்கள் உங்களை கடவுளின் இடத்தில் வைத்துப் பாருங்கள். நீங்களே கடவுள் என உணருங்கள். பிரபஞ்சம் முழுவதும் உங்களது படைப்பே என்றும், அனைத்தும் உங்கள் விருப்பத்தாலே நிகழ்கின்றன என்றும் உணருங்கள். உடனேயே உங்களுள் அபரிமிதமான அமைதியும், ஆற்றலும் ஊற்றேடுப்பதை நீங்கள் உணர்வீர்கள்.


பிறர் நம்மைத் திட்டும்போது...

பிறர் உங்களைக் காரணமின்றி திட்டுவதாகவும், காரணமின்றி துன்புறுத்துவதாகவும்  நீங்கள் கூறுகின்றீர்கள். அது உண்மையாக இருந்தாலும் கூட, அதற்காக அலட்டிக் கொள்ளாதீர்கள். நிலைமையைப் பொறுமையுடன் சமாளியுங்கள். இக்கட்டான நிலைமைகளைச் சமாளிப்பதில் அமைதி ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் என்பதை நீங்கள் காண்பீர்கள். யாராவது உங்களைத் திட்டினால் கண்களை மூடிக் கொண்டு பொறுமையாக இருங்கள். பிறர் அவர்கள் விருப்பம் போல் நினைக்கட்டும்.அவர்கள் விரும்புவதைச் சொல்லட்டும்

இந்த உலகம் முட்டாள்கள் நிறைந்தது. நீங்கள் அறிவுடையவராக விளங்குங்கள்.

எல்லோர் முன்னிலையிலும் பணிவுடன் இருங்கள். எந்த நிலைமையிலும் அடக்கமாக இருங்கள். நான் உயர்ந்தவன் அல்லது தாழ்ந்தவன் என்ற எண்ணத்தை விடுத்து அனைவரிடமும், அனைத்திடத்தும் கடவுளைக் காணக் கற்றுக் கொண்டால் தான் இது சாத்தியமாகும். கடவுள் அப்படி விரும்புகிறார். எனவே அது அப்படி இருக்கட்டும். பிறர் உங்களை நிந்திக்கையில் நீங்கள் மௌனமாக இருங்கள். கலக்கம் அடையாதீர்கள். பழிச் சொற்களை ஏற்றுக் கொண்டால் அடக்கத்திலும், தூய்மையிலும் நீங்கள் வளர்ச்சி அடைவீர்கள். அதுவே ஒரு தவம். ஆன்மீகதில் நீங்கள் உயர்வடைவீர்கள்.



Thursday, January 19, 2012

வேலை - அதுவே ஒரு தியானம்..

 வேலை - அதுவே ஒரு தியானம்..
 
உங்கள் வேலையில் நீங்கள் கவனம் செலுத்துங்கள். மன அமைதிக்கு முக்கியத்துவம் தருவோர் எல்லாவற்றிற்கும் மேலாக கடைப்பிடிக்க வேண்டிய நியதி இது. இந்த உலகத்தில் எதுவுமே உங்கள் கவனத்தை வேண்டுவதில்லை. அனைத்தையும் கவனிக்க ஒரு ஆண்டவன் இருக்கிறார். உண்மையில், உங்களையும் கவனிப்பது அவர் தானே! இந்த உண்மையை மறக்ககூடாது.- அதுவே ஒரு தியானம்..

குறை கூறாலாமா?



 நான் திரும்பவும் கூறுகின்றேன், உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். எவரையும், எதையும் குறை கூறாதீர்கள். குறை கூறுதல் என்பது திட்டுவதற்கு நிகர். எது நடந்த்தாலும், அது கடவுளின் இச்சையால் நடக்கிறது. கடவுளின் அனுக்கிரகம் இன்றி எதுவுமே நிகழ்வதில்லை. ஏதாவது நிகழ்ந்தது என்றால் அது உங்கல் பார்வையில் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ இருக்கலாம். அதற்கு கடவுளின் அனுமதி இருக்கிறது என்று தான் பொருள். நீங்கள் அதைக் கண்டனம் செய்தால் கடவுளின் விருப்ப்பத்தை, கடவுளின் பேரறிவை, கடவுளின் தீர்ப்பை நீங்கள் விமர்சிக்கின்றீர்கள் என்று தானே அர்த்தம். அதைச் செய்யாதீர்கள். உங்களுக்கு அமைதி கிட்டும்.